Tuesday, April 21, 2009

கவிதை கிறுக்கல் - 29

போதை காதலி
=============

புகையிலை
புகைத்ததில்லை

உன்
சுவாசத்திற்காக
காத்திருக்கிறேன் !!

மதுவினை
அருந்தியதில்லை

உன்
உதடுகளுக்காக
காத்திருக்கிறேன் !!

அழகிகளை
அணைத்ததில்லை

உன்
தழுவலுக்காக
காத்திருக்கிறேன் !!

போதைகளின்
கலவை ... நீ

உனக்காக
காத்திருத்தலும்
போதையே !!!

No comments:

Post a Comment